இளமை மீண்டும் வருமா?

இளமை மீண்டும் வருமா
இயற்கை இன்று தருமா
வலிமை மனம் பெறுமா
வசந்தம் இதுநிலை பெறுமா

களவு சூது கயமை ஏது
கவலை என்ற இருண்மை ஏது
நிலவின் உறவில் குறைவு ஏது
நிறைந்த மகிழ்வுக்கு எல்லை ஏது

கடந்ததை மீண்டும் பெற இயலாது
கனவில் நினைத்திட தடை கிடையாது
அடடா‌ அதற்கு இணை கிடையாது

அதை நினைக்கும் பொழுதினில்
நோய் கிடையாது!
மகிழ்ச்சி பெருகட்டும்

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.