உணவு என்பது நிலமும் நீரும் என
நம் முன்னோர்கள் சொன்னதுண்டு…
சோறு தந்து பெயர் பெயர் பெற்ற
பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…
நம் நிலத்தில் வளராத எதுவும் நமக்கான உணவில்லை
நம் நிலத்தில் ஊறாத நீரும் நமதில்லை…
எண்ணெயில் பொரித்த உணவு
நம் மண்ணில் இருந்ததாகத் தெரியவில்லை…
கேழ்வரகு கம்பு சாமை குதிரைவாலி என
சிறு தானியங்களுக்கோ குறைவில்லை
மாரடைப்பு இதய நோய்கள் வந்ததாக அறியவில்லை…
இன்று நம்மை சூழ்ந்திருக்கும் துரித
உணவால் வரும் நோய்க்கோ பஞ்சமில்லை…
பதப்படுத்தப்பட்ட சாஸ், சீஸ் போன்ற இராசாயன கலவை
உணவுகளால் வாழ்க்கை பாழாகும்!
இதில் பொய்யுமில்லை…
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942