கேட்காத காதுகளிடம்
கேட்டுக் கொண்டிருந்தான்
வேண்டுதல்
தூறல் பொய்கை
என்னை நனைத்துக் கொள்கிறது
மழை
விரிந்து கிடக்கிறது நாழிகை
மடித்து வைக்க ஆசை
கலைத்து விடுகிறது அடுத்த வினாடி
என்னை யாராவது
இறக்கிவிடுங்கள்
சிலுவையில் அறைந்த இயேசு
விடிந்து நேரமானாலும்
காதலி எழும்பவில்லை
கல்லறையை விட்டு
காகிதம்
கொஞ்சம் அழுக்கானது
கவிதையால்
கடனால் விஷ உணவை
உருட்டும் பொழுது
அனிச்சையாய் கை நீட்டியது குழந்தை
அவளால் உயர பறக்க
முடியவில்லை
சிறகில் கட்டிய தாலி
ஜன்னல் ஓரம்
சாரல் காற்று
எவனோ துப்பிய எச்சில்
தினமும் குப்பை கிடங்கில்
எட்டி பார்த்தேன்
குழந்தை கிடக்குதா என்று
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!