பிறக்கும் முன்னே எங்கிருந்தோம்
இருக்கும் வரையில் தெரியவில்லை
இறந்த பின்னே எங்கிருப்போம்
பிறந்த பின்னும் புரியவில்லை !
எதற்கும் மனிதன் துணிந்து விட்டான்
துறக்க எதையும் மறந்து விட்டான்
இயற்கை வாழ்வை இழந்து விட்டான்
செயற்கை வாழ்வில் உழலுகின்றான்!
உறவை என்றும் மதித்திருப்போம்
சிறிதும் பகைமை மறந்திருப்போம்
இருக்கும் வரையில் இணைந்திருப்போம்
எவரும் இம்மண்ணில் நலம் பெறுவோம்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!