உழைப்பதைத் தொடங்கிடு
நினைத்ததை முடித்திடு
பிழையினைத் திருத்திடு
தவறினைத் தகர்த்திடு
பழமையை வணங்கிடு
புதுமையைப் புகுத்திடு
பழகிய உறவினை
கனவிலும் நினைத்திடு
உயரிய பெரியவர்
நிழலிலே ஒதுங்கிடு
கயவரும் நடுங்கிட
துணிவுடன் செயல்படு
இதுவரை எழுதிய
எளியவன் உரையிது
முதியவர் இளையவர்
இருவரும் உயர்பெற!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com