பூனைக் குட்டியாய்
பதுங்கியிருந்த
பல நினைவுகள்
சில தருணங்களில்
புலியாய்ப் பாய்கின்றன!
புறாக்களாய் படபடக்கின்றன!
சில நேரம்
ஊஞ்சலாட்டம்
நிற்கும்
சமகாலத்தின்
சச்சரவில்!
கடந்து போகாமல்
நிலைத்திருந்த
சுவை கூட்டலின்
உச்ச காலங்கள்
ஏதும் மிச்சமில்லை!
இனி
கடந்து போகக் கடவும்
வழிகளும் பொழுதுகளும்
விளைத்து விட்டன
வித்தியாசங்களை
விடை தெரியாக் கேள்விகளை!
நன்றிகள் கொன்ற
பெரும் வேள்விகளில்
பிரதானமாய் நிற்பது
பத்திரங்களை
பத்திரப்படுத்தும்
பல
பாத்திரங்கள் மட்டுமே!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!