ஊரோரம் அய்யனாரு
காவலிருந்த காலத்துல
ஊருக்குள்ளே களவு இல்லை…
பெண்களின் கற்புக்கும் பங்கில்லை…
இடுப்புல ஒட்டுப் போட்ட உடுப்போட
ஓடியாடும் சிறுவருக்கும் பஞ்சமில்லை…
நல்ல தண்ணீர் கிணற்று நீர்
சுவைக்கும் குறையில்லை…
ஊரோரம் புளிய மரம்
நிழலுக்கும்பஞ்சமில்லை
ஊர்சாவடி பட்டியல் கல்
தூக்கத்துக்கும் தடையில்லை…
இப்ப நீ எங்கே போன அய்யனாரே !
இவையெல்லாம் மாறிப்போச்சே…
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!