ஒருமுறை ஒரு மனிதனின் வாயில் இருக்கும் பற்களுக்கு நாம்தான் எண்ணிக்கையில் நிறைய இருக்கின்றோம், அதனால் நம்மிடம் நிறைய பலம் உள்ளது என்ற ஒரு கர்வம் வந்து விட்டது.
பற்கள், நாக்கைப் பார்த்து, “நாங்கள் 32 பேரும் சேர்ந்து ஒரு தடவை உன்னை இறுக்கி அழுத்தினால் நீ காலியாகிவிடுவாய் என்று கேலி செய்து சிரித்தன.
அதைக் கேட்ட நாக்கு, ” நான் தனி ஆளுதான். ஆனால் இந்த மனிதன் யாரிடமாவது பேசும் போது, நான் ஒரு வார்த்தை மாற்றித் தவறாகப் பேசினால் போதும்; நீங்கள் 32 பேரும் காலியாகிவிடுவீர்கள்” என்றது.
அன்று முதல் பற்கள் அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டன.