விண்ணில் தவழ்ந்தால் வெண்மேகம்
நீருண்டால் நீலமேகம்
கருக்கொண்டால் கார்மேகம்
உருமாறி மழையாய்ப் பெய்து
அருவியாய் ஆறாய்ப் பெருகி
மண்ணில் மகிழ்வாய்த் தவழ்ந்து
மனிதனின் தாகம் தீர்க்கும் நீ
பெருங்கடலுடன் காதலாய்க் கலக்க
உப்பு நீராய் மாறுவதேனோ?
நீரினை சற்று நிறுத்திக் கேட்க
தூறலாய் அது என்
தோளினில் விழுந்திட அந்த
நொடியில் கிடைத்த சுகத்தில்
என்னை நானே மறந்து போனேன்….
இயற்கை தருகின்ற சுகத்திற்கு
ஈடாய் எதுவும் இல்லை
என்பதை உணர்ந்தேன்…
இயற்கையைப் போற்றுவோம்!
இனிய வாழ்வினை மீளப் பெறுவோம்!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!