விடியற் காலை எழுந்தவுடன் தோட்ட நெனப்பு வந்தது
கஞ்சி தூக்கிக்கிட்டு வரப்பு வழி நானும் போகிறேன்
ஜில்லுனு குளிர்ந்த காற்று சிலுசிலுக்க வைக்கிறது
கம்பீரமா மழை பின்பு சூட்சமமா சூரியன் பார்க்கிறது
சலசல சத்தத்துடன் தென்னை மரம் அழைக்கிறது
வந்தவுடன் வணக்கம் சொல்ல வாழையும்தான் சிரிக்கிறது
தங்க பிள்ளை வயக்கதிர் ஏக்கத்தோடு தலை அசைக்கிறது
கமகமன்னு மனத்துடன் மல்லிகை வரவேற்கிறது
அம்மா என்று சத்தமிட்டு பசுங்கன்று ஓடு வருகிறது
இத்தனை சொந்தம் இருக்கும்போது
எந்த சொந்தம் நான் தேடிடுவேன்
தங்கமே கொடுத்தாலும் தலைநகர் வேணாமுங்க
என் காலம் முடியும் வரை இந்த மண்வாசம் போதுமுங்க
மறுமொழி இடவும்