மதியநேர உணவுப்பழக்கம் உருக்குலைந்து போயிருச்சு
வெள்ளை சாதம் மங்கிப் போச்சு
ரசம் மோர் நசுங்கிப் போச்சு
ரெடிமேட் உணவுகளே நாகரீகம் என்பதாச்சு!
கலர் கலரா சாஸ் கலந்து கவர்ச்சியில மிதக்கும் உணவு
புற்றுநோயை சுமந்து வரும் பெருத்த உடலை நமக்கு தரும்!
வெற்று உடலில் கிருமிகளை வேகமாகப் புகுத்தி விடும்!
இட்டிலி பொங்கலில் விடியும் பொழுதை மாற்ற அடுத்த திட்டம் வரும்!
எட்டடிக்கு ஒரு மருத்துவமணை எளிதாக முளைத்து வளரும்!
எப்படி இதை தவிர்க்க என
இன்றே நாம் யோசிக்கணும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!