அந்த வீட்டு ஓனர் ஒருகூடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஒரு சிட்டையை எழுதிப் போட்டு, பணத்தையும் அதற்குள் வைத்து மணியிடம் கொடுத்து அனுப்பினார்.
மணி கூடையை எடுத்துக் கொண்டு கடையை நோக்கி புறப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தைத் தாண்டி அந்த கடைக்குள் நுழைந்தது மணி.
கடைக்காரரிடம் கூடையை கொடுத்தது.
கடைக்காரர் அந்த சிட்டையில் எழுதி இருந்த பொருட்களை எல்லாம் கூடையில் போட்டுக் கொடுத்தார்.
கூடையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பாக்கி பணத்தை கூடையில் போட்டு மணியிடம் கொடுத்தார்.
மணி கூடையை பெற்றுக் கொண்டு வேகமாக கடையை விட்டு வெளியேறி மெல்ல நடந்தது. வரும் வழியில் சிக்னல் ஒன்று இருந்தது. சிகப்பு விளக்கு எரிந்ததால் மணி அப்படியே நின்று விட்ட்து.
சிக்னலில் நாய் ஒன்று கூடையுடன் நின்று கொண்டிருப்பதை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“ஒரு நாய்க்குக் கூட சிக்னலில் நின்று செல்ல வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் ஆறறிவு கொண்ட மற்ற மனிதர்களுக்கு தெரியவே இல்லை” என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.
ஒரு வழியாக அந்த நாய் வீட்டிற்குள் வந்து கூடையை ஓனரிடம் கொடுத்தது.
கூடையை வாங்கிக் கொண்ட ஓனர் “ஏன் இவ்வளவு லேட்டா வர்ற?” என்று சொல்லி அதன் முகத்தில் தாக்கினார்.
ஐந்தறிவு உள்ள நாய்க்கு இருக்கும் அறிவு கூட ஆறறிவுள்ள மனிதனுக்கு இல்லை என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டது.
பெ.சிவகுமார்
இளநிலைக் கல்வியியல் முதலாம் ஆண்டு
பராசக்தி கல்வியியல் கல் லூரி
எஸ்.கோட்டைப்பட்டி
மதுரை மாவட்டம்
9361723667
மறுமொழி இடவும்