தாய்ப்பால் எப்படி குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தோ அது போலத்தான் மனிதர்களுக்கு முட்டை ஒரு சிறப்பான சத்துணவு. நம் எடை கூடி விடக்கூடாது என்று கவலைப் படுபவர்களுக்கு முட்டை ஓர் அருமருந்து.
முட்டை புரதச் சத்தையும், உடலுக்குத் தேவைப்படும் அமினோ ஆசிட் டையும் உள்ளடக்கி, எப்படி உடல் வளர்ச்சிக்கு உதவிட வேண்டுமோ அப்படி உதவுகிறது. வைட்டமின்களில் ‘சி’ வைட்டமின் தவிர, மற்ற பெரும்பாலான வைட்டமின்கள், முட்டை மூலம் நமக்கு கிடைக்கி கின்றன.நம் உடலுக்குத் தேவைப்படும் ‘மினரல்கள்’ (Minerals) முட்டையில் கிடைக்கின்றன.
பாஸ்பரஸ், அயோடின் ஆகியவை முட்டையில் உள்ளன; இரும்புச்சத்துக்கூட கிடைக்கிறது. அது போல் நமது உடலுக்கு அன்றாடம் தேவையான கால்சியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், குளோரின் யாவும் முட்டையில் உள்ளன. ஞாபக சக்திக்கு மிகவும் தேவைப்படும் சோலின் (Choline) உள்ளதால், மாணவர்களுக்கும் முதியவர்களுக்கும் முட்டை ஒரு நல்ல சத்துணவு.
அமெரிக்க இதய நோய் சங்கம் (AHA) ஒவ்வொரு நாளும் உணவில் 300 மில்லி கிராம் கொலஸ்டரால் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ‘ஒரு நாளைக்கு ஒரு முட்டை’ என்பது அதற்கான சரியான வழிமுறையாகும். கண்பார்வை சம்மந்தமான பாதுகாப்புக்கு முட்டை ஓர் அரிய பாதுகாவலன். முட்டையும், மீனும் மனித குலத்திற்கு இறைவன் கொடுத்த வரம். இனி ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!