காக்கா காக்கா ஓடிவா
கத்திக் கத்தி நடந்துவா
ஆக்கிய சோறு தின்னலாம்
அதன்பின் பறந்து போகலாம்
குருவி குருவி ஓடிவா
கூண்டை விட்டே இறங்கிவா
குருவி குருவி ஓடிவா
நெல்லைக் கொத்தித் தின்னவா
மயிலே மயிலே இறங்கிவா
தோகை விரித்து ஆடிவா
குயிலே குயிலே ஓடிவா
குழந்தை சிரிக்கப் பாடிவா