ஓட்டைப் பானையால்
ஒரு துளி நீரைக்கூட
தேக்கி வைக்க முடியாது
ஒரு பாதி மண்ணிட்டால்
ஒற்றை மரக்கன்றை
பெற்றெடுக்கும்
தகுதி பெறும்
அய்யோ ஓட்டையாகி விட்டதென
கவிழ்ந்திருக்கும் பானையாலே
பலனொன்றும்
கிடைப்பதில்லை
எந்த நிலையிலும்
தலை நிமிர… எல்லாமே
பயன்படத்தக்கதாகும்…
தலை நிமிர்ந்து நின்றிட்டால்
பிறர் பலன் பெறவே
நிலைத்திடலாம்!
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்