நம் கண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு சில வழிகளைப் பார்ப்போம்!
அதிக நேரம் அலைபேசியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
டி.வி.நிகழ்ச்சிகளை பத்தடி தொலைவில் அமர்ந்தே பார்க்க வேண்டும்.
பச்சைக் காய்கறிகள், காரட், பால் மற்றும் முட்டை அதிகம் உண்ண வேண்டும்.
மங்கலான வெளிச்சத்தில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பிரயாணம் செய்யும் சமயம், வாகனம் ஓடிக் கொண்டிருக்கும்போது படிப்பதைத் தவிர்க்கவும்.
படிக்கும் போதும், எழுதும் போதும் நிமிர்ந்து உட்கார்ந்து செயல்படுதல் அவசியம்.
நாற்பது வயதிற்கு மேல் ஓரிரு ஆண்டுகளுக்கொரு முறை கண் பரிசோதனை தேவை.
சூரியனைக் கண் கொட்டாமல் பார்ப்பதைப் கைவிட வேண்டும்.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும், பட்டறைத் தொழிலாளர்களும் பாதுகாப்புக் கண்ணாடி அவசியம் அணிந்து கொள்ள வேண்டும்.
நீரழிவு வியாதி, அதிக ரத்த அழுத்தம், குளக்கோமா (கண் அழுத்த நோய்) ஆகியவை நம் கண்களை மிகமோசமாகப் பாதிக்கக் கூடியவைகள். மேற்கூறிய நோய் உள்ளவர்கள் தகுந்த மருத்துவரை நாடி அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கண்புரை நோய் தோன்றும் பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல் உடனே தகுந்த சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்.
மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் கண்ணாடியின் சக்தியை (Power of Lens) அவ்வப்போது சிறப்பு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லது.
கூர்மையான பொருட்களுடன் குழந்தைகள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேற்சொன்னவைகளை முறையாக, ஒழுங்காகக் கடைப்பிடித்தால் நாம் எவ்வித கண் பிரச்சினையின்றி தீர்க்கமான பார்வையுடன் திகழ முடியும்!
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!