ஏதோ ஒன்றிற்கு எப்போதும் போல்
இப்போதும் பயப்படுகிறது என் மனசாட்சி…
விளையாட்டாய் சொல்லிய பொய்களில் இருந்து
விஸ்வரூபம் எடுத்த விபரீதங்களை அறிந்து கொள்ள முடிவதில்லை யாதெனில் அப்போதெல்லாம்
என்னை சிறார் என்று சொல்லிக் கொண்டதால்…
யாரும் சாட்சியற்று செய்த தவறென்ற போதும்
சாட்சியம் சொல்லிக் கொண்டிருந்த மனசாட்சியை
மண்ணுக்குள் மூடியது எல்லாம் இப்போது வரை
யாருக்கும் தெரிந்திடாத ரகசியமாய்…
ஞானப் போர்வைக்குள் புகுந்து கொண்டு
தத்துவத்தை தரித்த போதும் கனவுகளில்
தொங்கிக் கொண்டே மிரட்டுகிறது
நேற்றைய தவறுக்கான தூக்குக் கயிறொன்று…
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250