திருவும் கல்வியுஞ்சீரும் சிறப்புமுன்
திருவடிப் புகழ் பாடும் திறமும்நல் உருவுஞ் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா
உணர்வு தந்து என் உள்ளத் தமர்ந்தவா
திருவும் தெய்வமுமாகி அன்பாளர்தம்
குறை தவிர்க்கும் குணப்பெருங்குன்றமே
வெருவுஞ்சிந்தை விலகக் கஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே!