ஒரு கவிதை கவிதையாக
மாறுவதற்கான சாத்தியத்தின்
அடிப்படையில் மொழியுடன்
ஓர் உடன்படிக்கை
வைத்துக் கொள்கிறது
இதுகாறும்
எழுதப்பட்ட கவிதைகள்
என்னவாக இருந்தாலும்
சில பல கவிதைகள்
அதையும் மீறியும்
மிஞ்சியும் இருக்கிறது
அடுத்தடுத்த வார்த்தைகளினால்
அர்த்தம் பெற்று
மீண்டும் நினைத்து
மறந்து போகிறது
ருசிப்பது போல் படிப்பது
என்று எண்ணினால்
அது கவிதையாகுமென
வடிவத்தினுள் சிக்கிக்கொண்டிருக்கும்
சொற்கள் ஒரு பொருளாக ஆகிவிடுகின்றன
ஒரு அனுபவத்தை
கற்பனை செய்கிறேன்
அது தான் நான் என
செய்கிறேன் இக்கவிதையை
அது புத்தகத்தின் பக்கத்தில்
காட்சியாய் விரிகிறது
கவிதையின் வடிவம் என
மறுமொழி இடவும்