நல்ல காலம் பிறப்பதை
நடுச்சாமத்தில் அறிவிக்கும்
ஜக்கம்மா…
கிராமத்து மண் குடிசையில்
செய்வினை தகடுகளைக் கண்டெடுக்கும்
மந்திரவாதி….
தாயத்து கட்டினா மட்டும்
காவலுக்கு வந்து நிற்கும்
கருப்பன்….
என எல்லாமே
கரண்டு லைட் வெளிச்சம் கண்டு
காணாமல் போனதெங்கே?
இன்னைக்கு
காசுக்கு மட்டும் திருநீறு தரும் சாமி
மாடி வீட்டு வாசலுல மாலை
வாங்க மறு(ற)ப்பதில்லையே
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!