கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
கவிதைக்கும் வருத்தம் வந்தது
கருத்துக்குள் உன்னை வைத்தேன்
உறவுக்கும் பங்கம் வந்தது
உணர்வுக்குள் உன்னை வைத்தேன்
உணர்ச்சிகளும் ஊடிப் போனது
கவிதைக்குள் உன்னை வைத்தேன்
கண்ணுறங்க மறந்து போனது
எனக்குள் உன்னை ஒளித்தேன்
நான் எங்கோ தொலைந்து போனேன்
காதலா காதலா உன் மேல்
காதலால் ஆதலால்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!