உன் மீது
கொண்ட
காதலைச்
சொல்வதற்கு
எனக்கு
ஒரு அவகாசம்
கொடு…!
ராமனுக்காக
தன் இதயத்தை
திறந்து காட்டிய
அனுமனைப் போல
தன் நண்பனுக்காக
தலையைக் கொடுக்க
முன்வந்த
குமணனைப் போல
அல்லாமல்
என் காதலை
மெய்ப்பிக்க
ஒரு அவகாசம்
கொடு..!
அத்தனை
உள்ளடக்கத்தையும்
உணர்வையும்
வெளிப்படுத்த முடியாது
என் காதலே
ஒரு அவகாசம்
கொடு…!
நான் நானாகவும்
நீ நீயாகவும்
இல்லாமல்
நாமாக இருக்க
எனக்கு
ஒரு அவகாசம்
கொடு
என் காதலே…!
உன் பாலிய காலத்து
சிநேகிதர்கள் போல
நாம் எந்த உணர்வும்
இல்லாமல்
சலனமற்று இருப்போம்
அதனால்
என் காதலே….
எனக்கு
ஒரு அவகாசம்
கொடு…!
தீ மிதித்தக் கால்கள்
சுடுவது போன்று
இந்த உலகம்
நம் காதலை
ஏற்க மறுக்கிறது.
என் தேவதையே…!
நம் காதலை
கொப்பளித்து கொப்பளித்து
காரி உமிழ்வோம்
இந்த உலகை..!
என் காதலே
எனக்கு ஒரு
………..
எ.பாவலன்
drpavalan@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!