அறிவை விரிவாக்க அரியாசனத்தில் அமர்ந்தவரே
அறியாச் சிறுவருக்கு அற்புதம் செய்தவரே
செறிவாய்க் கல்வியினை நிறைவாய்த் தந்தவரே
அறிவின் ஆதியை அகத்தினில் விதைத்தவரே
அரைசாண் வயிற்றுக்கு அன்னத்தைக் கொடுத்தவரே
எண்சாண் மெய்தனில் உனைப்போல உயிரில்லை
உருவத்தில் உயர்ந்தவரே உழைப்பினில் சிறந்தவரே
கர்வம் ஏதுமின்றி தர்மம் புரிந்தவரே
கார்மேக மேனியிலே தேர்போல வந்தவரே
பார்போற்றும் தோரணையில் நேர்கொண்டு நடந்தவரே
கல்லாத மகனுக்குள் இல்லாத அறிவில்லையென்று
கலைமகளும் வியந்திடுவாள் உம்கல்விப் பணியினிலே
உம்வழியைப் பின்பற்ற உளமும் துடிக்குதைய்யா
உயர்வான ஆசானாய் உனையே க(கொ)ண்டதனால்
வரலாற்றின் பக்கமெல்லாம் உன்னால் புகழுறுதே
கரம்கூப்பி வணங்குகின்றோம் உமைப்போல கடவுளில்லை!
இவண்
கர்மவீரரின் கரப்பிடியில் நடைப்பியிலும் நரனாய்…