காலிபிளவர் வறுவல் அருமையான தொட்டுக் கறி ஆகும். காலிபிளவர் விட்டமின் கே சத்து மிக்கது.
இது பெரும்பாலோருக்குப் பிடித்தமான உணவுப் பொருளாகும். இனி சுவையான காலிபிளவர் வறுவல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காலிபிளவர் – 1 எண்ணம் (சிறியது)
சோள மாவு – 1 1/2 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் பொடி – 1 1/2 ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
முதலில் காலிபிளவரை படத்தில் காட்டியபடி சிறுதுண்டுகளாக வெட்டவும்.
பின்னர் வாயகன்ற பாத்திரத்தில் காலிபிளவர் துண்டுகள் மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் வைக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் முழுவதையும் வடிகட்டி விடவும்.
பின்னர் அதனுடன் சோள மாவினைச் சேர்த்து எல்லாவற்றிலும் படும்படி ஒருசேரக் கிளறி விடவும்.
பின்பு அதனுடன் தேவையான உப்பு மற்றும் மிளகாய் வற்றால் பொடியைச் சேர்த்து ஒருசேர கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியை அடுப்பில் ஏற்றி சமையல் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காலிபிளவர் துண்டுகளைச் சேர்த்து வேக விடவும்.
காலிபிளவர் சலசல என வெந்ததும் எண்ணெயிலிருந்து எடுத்து விடவும்.
இவ்வாறாக எல்லா காலிபிளவர் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான காலிபிளவர் வறுவல் தயார்.
இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட சாத வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
இவ்வறுவலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் காலிபிளவர் துண்டுகள் மற்றும் உப்புடன் மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைக்கலாம்.
காலிபிளவரில் சோள மாவினை சேர்ப்தற்கு முன்பு காலிபிளவரில் உள்ள தண்ணீரை ஒட்ட வடித்து விடவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!