காலை எழுவோம் எழுவோமே
காலைக் கடனை முடிப்போமே
நூலை எடுத்துப் படிப்போமே
தலையை வாரி முடிப்போமே
புத்தகம் பலகை எடுப்போமே
பள்ளி புகுந்து படிப்போமே
அத்தை அக்காள் போல்நாமே
ஆகும் வரையில் படிப்போமே
படிக்க படிக்க அறிவுண்டாம்
படிக்க பின்னொரு விழியுண்டாம்
படிக்க படிக்க பொருளுண்டாம்
பலரும் புகழ வழியுண்டாம்