ஒரு தாளும் பேனாவும்
மட்டும் போதும்
எழுத்துக்களை
உனக்காக செதுக்கி
வைக்கிறேன்.
எனக்குள் இருப்பதை
உனக்குள் கொண்டு வருகிறேன்.
கொஞ்சம் பொறுத்துக்கொள்
ஒரு கவிதையாக.
நீ…
தொலைத்த உன்னை
எப்படி என்னில் கண்டாய்?
சூரியனும்… சந்திரனும்…
சங்கமித்து கொள்கின்றன.
காதலர்களைப் போல…
வெட்கப்படும் போது
அமாவாசை
இரவு.
உன் வரவை
நிலவை
சூரியனைப்
போலவே
நோக்குகின்றேன்.
நான்
நிகழ்காலக் காதலுனுமில்லை
எதிர்காலக் கணவனுமில்லை ஆனாலும்
என்னுள் ஏன்
இத்தனை மாற்றங்கள்?
சில நிமிடத்திற்கு பிறகு
கால்ஷீட் காலாவதி
ஆகிவிட்டது.
நீ
எப்படி இருந்தால்?
என்னை
இப்படி செய்திருக்க முடியும்
பிராந்தையாக.
முனைவர் பாவலன்
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!