புள் விளையாடிய
புல்வெளியை – மானிடன்
கல்கொண்டு வெளியேற்றினான்
இல்கொண்டு விளையாட…
இல்கொண்டு விளையாடியவன்
நெல்கொண்ட வயலையெல்லாம்
பல்தொழில் முனையும்
இரசாயனத் தொழிற்பேட்டை யாக்கினான்
நல்லமுது நீரும் ஆனது அல்லமுதாய்…
வல்லான் வகுத்தான் ஓர் மார்க்கம் – பொருள்
இல்லானை மயக்க வீசினான் அருள் பார்வை
இல்லான் இணைந்தான் அங்கே இயந்தரத்தோடு
கல்லோனும் மாறினான் அங்கே இயந்தரமாகவே…
சொல்கொண்டு போரிட வந்தோரெல்லாம்
சொல்லை மட்டும் வீசிவிட்டு
இல்லொன்றைக் கட்டி
இங்கேயே இணைந்து விட்டனர்…
உள்ளொன்று வைத்துப் புறமொன் றுரைக்கும்
நல்லோரில்லா இடமோ – இந்நகரம்
புள் விளையாடிய புல்வெளியும்
நெல் விளைந்தாடிய வயல்வெளியும் – இன்று
சொல்லொணா அதிநவீன நகரமயமானது
நகரம் மயானமானதன் வெளிப்பாடோ –
இந்த கிராமம் மாயமாதல்!
க.வடிவேலு
தகடூர்
மறுமொழி இடவும்