அலைபேசியில் கிரிக்கெட் இலவசமாம்…
அது தருகின்ற விளம்பரங்கள் கொடும் விஷமாம்…
நிலை தடுமாற்றும் பான்மசாலா போடனுமாம்…
நிச்சயமாய் சூதாட்டம் ஆடனுமாம்…
களை மேவ பயிரினமே அழிவது போல்
கச்சிதமாய் நம் வாழ்வை அழிப்பதற்கு
உருவான கூட்டணியை உடைப்பதற்கு
யார் துணிவர் என்றேதான் சொல் மனமே!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!