குதிரைவாலி அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?

குதிரைவாலி அரிசி பருப்பு சாதம் குதிரைவாலி அரிசியைக் கொண்;டு செய்யப்படும் சுவையான உணவாகும்.

சிறுதானிய வகைளை நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  குதிரைவாலி பருப்பு சாதத்தை எல்லோரும் விரும்பி உண்பர்.

எளிமையான முறையில் குதிரைவாலி அரிசி பருப்பு சாதம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

குதிரைவாலி அரிசி – 2 கப் (200 கிராம்)

பாசிப் பருப்பு – ¾ கப் (75 கிராம்)

இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 4 பல் (மீடியம் சைஸ்)

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (சிறியது)

சின்ன வெங்காயம் – 50 கிராம்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 4 கப்

விழுதாக அரைக்க

பெருஞ்சீரகம் (சோம்பு) – ½ டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

தேங்காய் – ¼ மூடி

மிளகாய் வற்றல் – 2 எண்ணம்

தக்காளி – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பெருஞ்சீரகம் – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

கடுகு – ¼ டீஸ்பூன்

குதிரைவாலி அரிசி பருப்பு சாதம் செய்முறை

முதலில் குதிரைவாலி அரிசியை களைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

 

ஊற வைத்த குதிரைவாலி அரிசிஊற வைத்த குதிரைவாலி அரிசி

 

பாசிப்பருப்பினை வாசம் வரும் வரை லேசாக வறுத்து ஆற விடவும்.

பாசிபருப்பினை வறுக்கும்போதுபாசிபருப்பினை வறுக்கும்போது

 

சின்ன வெங்காயத்தை தோலுரித்து நேராக சிறுதுண்டுகளாக கீறிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை கழுவி காம்பு நீக்கி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

இஞ்சி, வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தக்காளியைக் கழுவி சிறுதுண்டுகளாக்கவும்.

கறிவேப்பிலையை அலசி கிள்ளிக் கொள்ளவும்.

பெருஞ்சீரகம், சீரகம், தேங்காய், மிளகாய் வற்றல், நறுக்கிய தக்காளி, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

 

அரைத்த மசாலாக் கலவை
அரைத்த மசாலாக் கலவை

 

குக்கரினை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.

 

தாளிதம் செய்யும்போது
தாளிதம் செய்யும்போது

 

பின் அதனுடன் நேராக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

சின்ன வெங்காயத்தை வதக்கும்போது
சின்ன வெங்காயத்தை வதக்கும்போது

 

பாதி வதங்கிய நிலையில் இஞ்சி, பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

 

இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்ததும்
இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்ததும்

 

பிறகு விழுதாக அரைத்த கலவை, தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.

 

மசாலாக் கலவையைச் சேர்த்ததும்
மசாலாக் கலவையைச் சேர்த்ததும்

 

பின் அதனுடன் வடித்த குதிரைவாலி அரிசி, வறுத்த பாசிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

 

குதிரைவாலி அரிசி, பாசிபருப்பினைச் சேர்த்ததும்
குதிரைவாலி அரிசி, பாசிபருப்பினைச் சேர்த்ததும்

 

பின் அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு சேர கிளறி குக்கரை மூடி விசில்(வெயிட்)  போடவும். அடுப்பினை சிம்மில் வைக்கவும்.

 

குக்கரை மூடும் முன்
குக்கரை மூடும் முன்

 

பத்து நிமிடங்கள் கழித்து அல்லது மூன்று விசில் வந்தவுடன் அடுப்பினை அணைத்து விடவும்.

 

குக்கரை திறந்ததும்
குக்கரை திறந்ததும்

 

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு சேரக் கிளறவும். சுவையான குதிரைவாலி அரிசி பருப்பு சாதம் தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து உண்ணலாம்.

 

சுவையான குதிரைவாலி  அரிசி பருப்பு சாதம்
சுவையான குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்

குறிப்பு

சிறுதானிய வகைகள் எளிதில் அடிப்பிடித்து விடும். எனவே குக்கரை மூடியதும் அடுப்பினை சிம்மில் வைக்கவும். சரியான நேரத்தில் அடுப்பினை அணைத்து விடவும்.

குக்கரின் கைபிடியை தொடும்போது கொதிக்கும் அதிர்வு இல்லை எனில் அதுவே அடுப்பினை அணைக்க சரியான நேரம். எனவே குக்கரின் கைபிடியை அடிக்கடி சோதித்துக் கொள்ளவும்.

 ஜான்சிராணி வேலாயுதம்

 

 

One Reply to “குதிரைவாலி அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.