குறுக்கெழுத்துப் புதிர் – 5

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.

குறுக்கெழுத்துப் புதிர் ‍- 4 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இடமிருந்து வலம்

1) அதிக நாடுகளைக் கொண்ட கண்டம்

4) அரிச்சந்திர புராணத்தில் இடம் பெற்றுள்ள பகுதி இது

6) அமைதி வேறு சொல்

8) இந்த வர்த்தக‌த்தில் முதலீடு செய்பவர்கள் அதிகம்

10) பூக்களுக்கும் வண்டுகளுக்குமான தொடர்பு இது

11) காற்றொலி இல்லை என்றால் ஒரு ___________ கேட்பதில்லை

13) கொரோனா தடுப்பு மருந்து இதன் மூலம் செலுத்தப்படுகிறது

15) சில என்பதன் எதிர்பதம்

18) பொருட்களை விலை மற்றும் இதன் அடிப்படையில் வாங்குகிறார்கள்

19) பிரபு நடித்த படங்களில் ஒன்று

20) இத்தாலியின் தலைநகரம்

21) அரிசியை வைத்து செய்யப்படும் உணவு

22) இந்த நாகரீகம் அரசியல் தலைவர்களுக்குத் தேவை

வலமிருந்து இடம்

5) கேட்பரீஸ் கம்பெனியின் தயாரிப்பு

மேலிருந்து கீழ்

1) இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்

2) வேதங்களில் இதுவும் ஒன்று

3) முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அமைக்கும் வரை தற்காலிக பொறுப்பில் இருக்கும் அரசின் பெயர்

4) யானைக்கு பிடிக்கக் கூடாது

7) ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையில் செய்யப்படும் அறுவடை

9) தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலம்

10) பூ வகை

11) ஆற்றினைக் கடக்க உதவுவது

12) இந்த பழம் உண்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

15) பழமை வாய்ந்த நடனம்

16) அகந்தை வேறு சொல்

17) நாம் உண்ணும் உணவுகள் நம் உடலில் சென்றடையும் உறுப்பு

கீழிருந்து மேல்

6) தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு

14) சிவாஜி நடித்த படம்

21) தேவிஸ்ரீ பிரசாத் தொடர்புடைய துறை

வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342

குறுக்கெழுத்துப் புதிர் ‍- 4 க்கான விடை

குறுக்கெழுத்துப் புதிர்- ‍ 4- விடை
குறுக்கெழுத்துப் புதிர்- ‍ 4- விடை

முந்தையது – குறுக்கெழுத்துப் புதிர் – 4

அடுத்தது – குறுக்கெழுத்துப் புதிர் – 6

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.