குறுக்கெழுத்துப் புதிர் - 9

குறுக்கெழுத்துப் புதிர் – 9

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.

குறுக்கெழுத்துப் புதிர் ‍- 8 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இடமிருந்து வலம்

1) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்று

3) விசை X பொருள் நகர்ந்த தொலைவு =

4) நல்ல திரைப்படங்கள் இதனால் அமைகின்றன‌

5) கடவுள் இல்லை என்று சொல்வது

8) விடுகதை வேறு சொல்

9) உங்கள் சித்தியுடைய சித்தப்பாவின் அண்ணன் மகள் உங்களுக்கு என்ன உறவு?

11) பொருளின் தரம் இதை வைத்தே கணக்கிடப்படுகிறது

13) தலை காக்குமாம் ‍‍‍‍‍——–

14)நேபாளி

மேலிருந்து கீழ்

1) எம்ஜிஆர் நடித்த படங்களில் ஒன்று

2) நரியிடம் இது அதிகம் இருக்குமாம்

3) வேதாரண்யம் என்ற ஊரை சுருக்கமாக இப்படி சொல்வார்கள்

4) ஒருவகை தானியம்

7) உலகம்

9) சிம்பு நடித்த படம்

10) பெண்கள்

11) விந்து வேறு சொல்

கீழிருந்து மேல்

13) ஒரு வகை கடல் மீன்

15) மேகம்

16) பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குநர் இவர்

வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342

குறுக்கெழுத்துப் புதிர் ‍- 8 க்கான விடை

குறுக்கெழுத்துப் புதிர்- ‍ 8- விடை
குறுக்கெழுத்துப் புதிர்- ‍ 8- விடை

முந்தையது – குறுக்கெழுத்துப் புதிர் – 8


Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.