சமயக்கருப்பு!

நானும் அம்மாவும் மதுரையில் உள்ள சமயக் கருப்பன் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தோம். ஒருவழியாக அந்தப் பேருந்தில் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

கோவிலின் நுழைவு வாயிலில் நானும் அம்மாவும் எங்களுடைய செருப்பை கழற்றி விட்டு மெதுவாக நகர்ந்தோம். அப்பொழுது பல கடைகள் அருகில் இருந்தன.

கடைக்காரர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரையும் கூவி கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

“வாங்கம்மா! வாங்க! இங்க வாங்க கடைக்கு வாங்க! தேங்காய்பழத்தட்டு வாங்கிட்டுப் போங்க!”

“வாங்கம்மா! வாங்க! தேங்காய்பழத்தட்டு 200 ரூபாக்கு வாங்கிக்கோங்க! வாங்க அம்மா வாங்க!” என்று பக்தர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தார் ஒருவர்.

அம்மா அவர்களிடம் கொஞ்சம் பேரம் பேசினார்.

“அண்ணே கொஞ்சம் குறைச்சு குடுங்க 200 ரூபாய் சொல்றீங்களே?”

“அக்கா….”

“தேங்காய், வாழைப்பழம், ரோசாப்பூ மாலை, சுருட்டு, பத்தி, சூடம், சாம்பிராணி, திருநீறு, குங்குமம், பன்னீர், காதோல கருகமணி, எலுமிச்சம்பழம் எல்லாமே போட்டு வச்சிருக்கோம்!”

“இதுல குறைக்கிறதுக்கு ஒன்னும் இல்லக்கா! அந்த காலத்துல குறைச்சி இருந்துச்சு! இப்ப விலைவாசி கூடிப்போச்சு! என்ன பண்றது!”

“இந்தாங்கணே காசு” என்று எனது பையில் இருந்து 200 ரூபாய் நோட்டை கொடுத்து விட்டேன்.

என்று அந்த சமயக்கருப்பனை வணங்கி விட்டு, அந்த தேங்காய் பழத்தட்டை எங்களிடம் கொடுத்தார் அந்த கடைக்காரர்.

தேங்காய் பழத்தட்டை வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்று விட்டோம். சமயகருப்பன் சன்னதியில் பூசாரியிடம் நாங்கள் வாங்கி வந்த தேங்காய் பழத்தட்டை கொடுத்தோம்.

அவரும் உள்ளே சென்று சமயகருப்பனுக்குத் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டினார்.

சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் அந்த தட்டை பெற்றுக் கொண்டு நானும் அம்மாவும் கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து, தட்டில் உள்ள வாழைப்பழம், உடைத்த தேங்காயை உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

எனக்கு போன் வந்தது ஒரு புதிய நம்பரில் இருந்து.

“ஹலோ பெருமாள் மகனா நீங்கள்”

“ஆமாம் நீங்கள் யாருங்க”

நானும் அம்மாவும் அழுது கொண்டே விரைவாக பேருந்தில் ஏறிக் கொண்டு அருப்புக்கோட்டை நோக்கி விரைந்தோம்.

மருத்துவமனைக்குள் சென்றபோது அப்பாவின் அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நாங்கள் அழுது கொண்டு வருவதை பார்த்து “ஒன்றும் பயப்பட வேண்டாம்! நன்றாகத் தான் இருக்கிறார்”

“வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத விதமாக காலில் ஒரு பெரிய
இரும்புக் குழாய் விழுந்ததால் காலில் ரத்தக்கட்டு ஏற்பட்டு உள்ளது. அதனால் வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார்.

உடனடியாக நாங்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து சேர்த்தோம். கொஞ்சம் லேட்டா ஆகி இருந்தா காலயே எடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று டாக்டர் சொன்னார்! அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்!” என்று கூறினார்.

அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். அம்மா எங்களது பையில் இருந்த திருநீற்றை எடுத்து அப்பாவின் நெற்றியில் பூசி விட்டார்!

“சரிங்க தம்பி; நான் வீட்டுக்கு போறேன். அப்பாவ நல்லபடியா பார்த்துக்கோங்க! இந்த மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு குடுங்க” என்று என்னிடம் கொடுத்தார்.

நானும் அம்மாவும் அந்த அண்ணனுக்கு நன்றி கூறினோம்.

“இதுக்கெல்லாம் எதுக்கு தம்பி நன்றி சொல்லிக்கிட்டு இருக்கீங்க!” என்றார்.

“சரிங்க தம்பி நாளைக்கு எப்படி இருக்காருன்னு சொல்லுங்க! நான் கிளம்புறேன் தம்பி!”

“அண்ணே உங்க நம்பர் குடுங்க”

என்னுடைய போனில் அவர் நம்பரை பதிந்து கொண்டேன்.

“உங்க பெயர் என்ன அண்ணே?” என்று கேட்டேன்.

கருப்பசாமி” என்று கனத்த குரலில் கூறிவிட்டுச் சென்றார்.

அம்மாவுக்கும் எனக்கும் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

தேங்காய்பழத்தட்டு கடைக்காரர் சாமி கும்பிடும் போது கூறிய இந்த வார்த்தைகள் என் நெஞ்சில் ஒரு கணம் வந்து விட்டுப் போனது.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாமாண்டு
அருப்புக்கோட்டை
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.