நீ வீணையென்றால்
நான் அதன் நரம்பு
ஆனால் உன் விரல்கள்
எனை மீட்டத் தயங்குவதேன்?
நீ காற்று என்றால்
நான் அதன் சுகந்தம்
ஆனால் நீ என்னை
சுவாசிக்க மறுப்பதேன்?
நீ பாட்டு என்றால்
நான் அதன் மெட்டு
ஆனால் என்னுடன்
சேர்ந்திசைக்க
மறுப்பதேன்?
நீ கண்கள் என்றால்
நான் அது காணும்
காட்சி ஆனால் நீ
எனை பார்க்க
மறுப்பதேன்?
நீ உயிர் என்றால்
நான் உன் உடல்
நீ என்னை விட்டுப்
பிரிந்ததேன்?
ரோகிணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!