சரிசமம் – குட்டிக் கதை

“என்னங்க தலைவரே! ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ஏதும் விஷேசமா?”

“அட ஆமாங்க! என் பெரிய பொண்ணுக்கு சாட்சாத் அந்த மகாலெட்சுமியே வந்து பொறந்துருக்கா… இந்தாங்க இனிப்பு எடுத்துங்கோங்க”

“அடாடடா! அதானே பாத்தேன் இருக்காதா பின்னே? புண்ணியம் பண்ணவாளுக்கு தான் ஓய் பொண்ணு பொறக்கும். பாவம் பண்ணவாளுக்கு தான் பையன் பொறப்பானு சும்மா ஒன்னும் சொல்லல ஓய்!.”

“அதென்னமோ உண்மைதான் ஓய்!.. பாக்காத தூரம் போனாலும் சாப்பிட்டியானு கேக்கற பொண்ணு எங்க? …. பக்கத்துலயே நின்றாலும் பாக்காத பையன் எங்க?…. ஹ்ம்… சரி அது போகட்டும் ஐயா உன் பையனுக்கு எப்போ கல்யாணம்?”

“அத ஏன் கேக்கறீங்க? ஊரு உலகமே சுத்தறேன் ஒரு பொண்ணு கூட அமையல…”

இரண்டு வாரம் கழித்து மீண்டும் சந்திக்கின்றனர்.

“என்ன தலைவரே ரொம்ப சோகமா இருக்கீங்களே?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா”

“அட! தாத்தானு கூப்பிட பேத்தி வந்துட்டா அப்புறம் என்ன?”

“ஆமாமா… என்னத்த ஓய் சொல்ல … அததுக்கும் அதிர்ஷ்டம் வேணும்…. பரம்பரைக்கு பேர் சொல்ல பையன் வேணும்னா…. கழுத இப்பவும் பொட்டையால பொறந்துருக்கு”

“அதென்னமோ உண்மைதான் ஓய்! அதிர்ஷ்டம் இருக்கவாளுக்குதான் ஆண்பிள்ளை பொறக்கும்னு சும்மாவா சொன்னாங்க?”

“ஆமா ஓய்! ஆச இருந்து என்ன பண்ண? அம்சம் இல்ல ஓய்!”

(சரிசமம் அம்சமாக உள்ளதா வாசகர்களே)

சுகன்யா முத்துசாமி

தந்தையுடன் சுகன்யா முத்துசாமி
தந்தையுடன் சுகன்யா முத்துசாமி

One Reply to “சரிசமம் – குட்டிக் கதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.