சர்க்கரை கட்டுப்பாடு

சர்க்கரை கட்டுப்பாட்டை காலையில் சாப்பிடும் முன்னும், பிறகு சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்தும் இரத்தப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் – சாப்பிடும் முன் இரத்தத்தில் சர்க்கரை அளவு 80 – 120மிலி, சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்து 120 – 160மிலி.

சாப்பிடும் முன் 140க்கு மேலும், சாப்பிட்ட பின் 200க்கு மேலும் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையென்று பொருள்.

சர்க்கரை நோய் சிகிச்சையில் ஐந்து முக்கியக் கோட்பாடுகள்

1. உணவு

2. உடற்பயிற்சி

3. மருந்துகள்

4. பரிசோதனை

5. சர்க்கரை நோய் கல்வி

சர்க்கரை நோய் சிகிச்சை என்பது மேற்கண்ட 5 கோட்பாடுகளும் இணைந்த ஒரு கூட்டு சிகிச்சை. இதில் உணவு முறையை மட்டுமே கடைப்பிடித்தால் சரியாகிவிடும் என்றோ, உடற்பயிற்சி செய்தால் மட்டுமே சரியாகிவிடும் என்றோ, இன்சுலின் அல்லது மாத்திரை சாப்பிட்டால் மட்டும் போதும் என்றோ எண்ண முடியாது.

இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்துதான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். எனவே, இதில் ஒன்று மாறினாலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.