சாபங்களைத் தவிர்ப்போம் – கவிதை

அதோ தெரிகிறது காமக்குளம்
கை கால்களை நீட்டி மடக்கி
உள் நீச்சல் வெளி நீச்சல் என
நீண்டு நீராடுவோம் வா…

முன்னொரு நாளில்
ரதியும் மன்மதனும்
ராவோடு ராவாக
வெட்டிய குளம் என
வேதாந்திகள் விரிக்கும்
வாயில் தெரிக்கிறது சேதி …

ஆதாமும் ஏவாளும் கூட
ஆட்டம் போட்டதாய்
வேதம் ஒன்று சாதகமாய்
சாட்சியம் சொன்னது…

அந்தக் குளத்தில்
கல்லெறிந்தவர்க்கே சந்ததி
சாபவிமோட்சனமாம்
வா! சாபங்களைத் தவிர்ப்போம்…

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.