தென்றல் தனைச் சுமந்து வரும்
தென் பொதிகை சாரலே
என்ன என்று புகழ்ந்து பாட
உன் அருமைக் காதலை
குன்றில் இருந்து குதித்து வரும்
குற்றால அருவி யாய்
எங்கு இருந்து நீ வந்தாய்
என் இதயம் மகிழவே
சின்ன சின்ன துளியென நீ
சிதறி விழும் பொழுதிலே
என்ன ராகம் சொல்லித் தந்தாய்
இலைகள் தாளம் போடுதே
உன்னைத் தழுவி நிற்கும் பொழுது
உயர்ந்த சொர்க்கம் ஆனதே
அன்றும் இன்றும் என்றும் உன்
அணைப்பில் வாழ்வு இனிக்குமே
–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!