அழகான அர்த்தமுள்ள ஆயிரம்
சிற்பங்களை செதுக்கலாம் ஒரு சிற்பி
அரிய ஆயிரக்கணக்கான சிற்பிகளை
உருவாக்கும் சிற்பிகளின் சிற்பி ஆசிரியர்
ஆசிரியர் வழிகாட்டியாகும் போது
மாணவன் தேடலில் தீவிரமடைகிறான்
ஆசிரியர் கடலாகும் போது
மாணவன் படகாய் மாறிப் பயணிக்கிறான்
ஆசிரியர் அறிவின் மூலிகையாகும்போது
மாணவன் அறியாமை நோய் நீங்குகிறான்
ஆசிரியர் தன்னலம் நீக்கும்போது
மாணவன் மனிதம் கற்றுக் கொள்கிறான்
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது
அவனுக்குள் ஓர் ஆர்வம்
யாருக்கும் தெரியாமல் துளிர்விட்டு
வளர்ந்து கொண்டே இருக்கிறது
அவனுடைய உலகத்திற்குள் சென்று ,
அவனை புரிந்து தட்டிக் கொடுக்கும்
ஆசிரியர், தவம் செய்யும்
முனிவரினும் புனிதமானவர்!
உயர் பண்பு நலன் கொண்டு பிறர்
துயர் துடைத்துப் புதிய உலகம்
சிறப்பாய்ப் படைக்கும் சிற்பிகள் மாணவர்
சிற்பிகளின் சிற்பி ஆசிரியர்
ப. கலைச்செல்வன்
இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9385517371