அனைத்தும்
தனக்கேயென
ஆர்ப்பரிக்கும்
அலைகடல் மனம்
அமிழ்ந்து எழுந்து
கோபுரமாய் குவிக்கிறது
குப்பை மேடுகளை!
தன்னலமே
பிரதானமென
முண்டியடித்து
முழுதும் பெரிதாய்
விழுங்குதல் நிகழும்!
முட்டித்தள்ளி முந்தி
முன்னால் பறக்கும்
அவலங்களை நிகழ்த்தி
அழுத்தும் பிறரை!
ஆதிமுதல் அந்தம் வரை
மூழ்கடிக்கிறது
சுயநலக்குறிக்கோள்
ஒன்றேயெனப் பரவி!
ஏறிவிட்ட விஷத்தால்
ஏதேதோ உருமாறி
விடாது கபளீகரிக்கும்
வேண்டி விரும்பி
தன்வசம்!
தன்னல ஆசையின்
அளவில்லா விளிம்பு கடந்து
எரிதணலெனச் சுடும்
சுயநலப் பெருமலை!
ஏதோ ஏனோ
வெகுவாய்
உயர்த்திப் பிடிப்பதாய்
உணர்வு மேலோங்க
நாளின் நிஜங்களின்
இறுதிப் பிடியில்
ஏதுமின்றி
சத்தமின்றியே நழுவுகிறது
சுயநலம் உவந்தளித்த
பெரும் மாயை!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
மறுமொழி இடவும்