சேமியாவிற்கு இயற்கையாகவே விழுவிழுப்புத் தன்மை உள்ளதால் சிலருக்கு பிடிக்காது.
இதில் எப்படி உதிரியாக மட்டும் அல்லது சுவையான சேமியா ரவை உப்புமா செய்வது என்று பார்ப்போம்.
முதலில் வாணலியில் சிறிது கூடுதலாகவே எண்ணெய்யை ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, முந்திரி, கடலைப் பருப்பு, கருவேப்பிலை நறுக்கிய 2 பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
இவை நன்கு சிவக்கும் தருவாயில் 2 பெரிய வெங்காயம் நீளவாக்கில் அரிந்தது, அதனோடு பொடியாக அரிந்த பீன்ஸ், கேரட்டையும் சேர்த்து நன்கு வதக்கி இவை மிருதுவானதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் மளமளவென கொதித்ததும் உப்பு சேர்த்து, முதலாவதாக ஒரு கைப்பிடி அளவு நன்கு வறுத்த ரவை அதனோடு உடனடியாக சேமியா சேர்த்து ஒரு கிண்டு கிண்டி 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
இவ்வாறு இருமுறை கிண்டி மூடி எடுத்தால் சுவையான சேமியா ரவை உப்புமா தயார்.
குறிப்பு
1. ரவையை வாசம் வரும்வரை 5 நிமிடம் வறுத்து உபயோகிக்கவும்.
2. சேமியா பாயாசத்துக்கானதை உபயோகிக்க வேண்டாம். உப்புமாவிற்கானதை கேட்டு வாங்குங்கள். ஏற்கனவே வறுத்தது என்று கவரின் மேல் எழுதியதை வாங்கினால் இன்றும் நல்லது.
3. முக்கியமானது ரவையும் சேமியாவும் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது இரண்டும் கலந்து தண்ணீர் தனியாக தெரியாதபோது நிறுத்திக் கொள்ளவும்.