சேற்று வயலில்
செழுமை காண்போம்
சோற்றுக்கு நெல்லை
விளைய வைப்போம்
செழுமை எங்கும்
செழுத்திடச் செய்வோம்
செங்கரும்பும் பெருகிட
செவ்வாழையும் விளைவித்திடுவோம்
உயர் இரக
உன்னத நெல்வகை
உருவாக்கியே இங்கு
உயிரான உணவழிப்போம்
நதிகளை தேசிமாக்கியே
நம்மில் ஒற்றுமையாகிடுவோம்
நன்செய் நிலங்களை
விவசாயத்திற்கே பயனாக்குவோம்
பூமியின் படுகையில்
பூமாதேவியின் காலடியில்
பூக்களையும் மரங்களையும்
பூதாகரமாப் வளர்த்திடுவோம்
உலகின் மூலையெங்கும்
உயர்த்திச் சொல்வோம்
உன்னதமான விளைச்சலை
உரமாக்கிடவே பாடுபடுவோம்!
கவிமணி இரஜகை நிலவன்
மும்பை