ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு
நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!
நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்
வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !
காளத்தியப்பன் காசிநாதனை கண்டிட சுகம்கூடும் – நம்
கோலமும் மாறும் கோடீஸ்வரனின் பேரருள் நமைநாடும் !
ஆதிமூலனை அர்த்தநாரியை அனுதினம் துதிபாடு- நல்
சோதி வடிவான சொக்கநாதனை சொல்லிட பயமேது!
ஆதியண்ணலை ஆடும் நாதனை அடைந்திடும் வழிபாரு – பெரும்
பூதப்படையனை பாகம் பெண்ணனை பாடியே அருள்சேரு!
ஆடல் வல்லனை அடர் சடையனை அணைத்திடு மனதோடு- அந்த
ஓடேந்தியின் ஒளிர்மேனியில் ஒடுங்கிடும் இடம்தேடு!!!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!