கலங்காதிரு மனமே கலங்காதிரு
பொங்கிவரும் ஆசையும்
பொங்கியெழும் கோபமும்
உன்னைக் கலங்க வைக்கும் மனமே
நீ கலங்காதிரு!
இலக்குகள் கனவுகளாய்க் கலையும் போதும்
சுற்றம் இகழும் போதும்
உற்ற நட்பு பிரியும் போதும்
கொண்ட காதல் கானல்நீராய் மறையும் போதும்
கொள்கை கொண்ட மனமே
நீ கலங்காதிரு!
அவமானங்கள் புதிதில்லை
அசிங்கம் என்று ஒன்றுமில்லை
அவனியில் எவரும் விசித்திரமில்லை
விசித்திரங்கள் எவருக்கும் புரிவதில்லை
விசித்திரமான மனமே
நீ கலங்காதிரு!
வெற்றிகள் மனதை நிரப்புவதுமில்லை
தோல்விகள் மனதை குழப்பாமல் இருப்பதுமில்லை
குழப்பம் கொண்ட மனமே
உலக மாயை கண்டு
நீ கலங்காதிரு!
ராஜன் பாபு
a.b.j.babu@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!