டெங்கோவும் அப்பாவும் – கவிதை

நீ எதுவுமாக இருந்ததில்லை

நீ எதுவுமாக இருக்கவில்லை

நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை

நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்

அந்த உண்மை இல்லாமல் நான் எதுவும் இல்லை

எதுவாகவும் என்னால் இருக்கவும் முடியாது

என் அம்மா எப்படிப்பட்டவள்?

அவள் எங்கே சென்றாள்?

அவளுக்கு என்ன ஆயிற்று?

வெற்றிடம் ஒன்று உருவாகும் போது

வேறு ஏதோ ஒன்று அங்கு வந்து நிரம்பியாக வேண்டும்

எல்லோரும் செய்வது அதைத்தான்

விளக்கம் அளிக்காமல்

அதை உன்னால் புரிந்துகொள்ள முடியாதென்றால்

விளக்கம் அளித்தாலும்

அதை உன்னால் புரிந்துகொள்ள முடியாது

வேறு யாரோ உண்டாக்கிய வெற்றிடத்தை

நான் நிரப்பிக் கொண்டிருக்கிறேன் என்றால்

நான் உண்டாக்கிய வெற்றிடத்தை நீதான் நிரப்புவாய்

டெங்கோ கடைசியாக ஒருமுறை

அவன் அப்பாவைப் பார்க்கத் திரும்பியதும்

அதிர்ந்து போனான்

அவன் அப்பாவின் கண்களிலிருந்து

ஒரேயொரு கண்ணீர்த்துளி!

(ஜி .குப்புசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் ஹாருகி முரகாமியின் ”பூனைகளின் நகரம்” சிறுகதையிலிருந்த இலக்கிய வளமிக்க வாக்கியங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்).

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

3 Replies to “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”

 1. அடடே…பிரமாதம் பிரமாதம்

  ஜி குப்புசாமியின் பூனைகள் நகரம் எனும் சிறுகதையை சிறுகதை என்று சொல்வதை விட அது ஒரு குறுநாவல் என்று சொல்ல வேண்டும்.

  தொடர்ந்து இரண்டாவது வாரமாக இனிது இதழில் நீங்கள் எழுதும் இந்த கவிதை தொடர் பூனைகளின் நகரம் என்ற படைப்பு உங்களை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது அல்லது நீங்கள் அதை விட்டு வெளியேற மறுக்கிறீர்கள் என்பதை இந்த கவிதை உணர்த்துகிறது.

  டெங்கோ போன்று ஒரு மகனை நாம் உருவாக்கி விடக்கூடாது. அவன் பின்னொரு நாளில் நம்மை தகப்பனாக கூட ஏற்காவிட்டாலும் ஒரு சக மனிதனாக கூட அவன் மதிப்பதில்லை முரண்பாடு நீடிக்கும்.

  ஆனால் அவன் செய்த தவறுக்காக தாய் சித்தம் தேடிக் கொள்ளும் தொனியில் தான் அவன் கண்களில் கண்ணீர் சொருகி நிற்கிறது.

  உங்கள் கவிதை ஜி குப்புசாமியை போலவே பூனைகளின் நகரத்தை மீண்டும் மீண்டும் அதன் சாளரத்தை திறந்து கொண்டிருக்கிறது

  மகிழ்ச்சி அய்யா

 2. நான் சமீபத்தில் படித்த அதாவது ஒரு கடந்த ஐந்தாண்டுகளில் இது ஒரு மிகப்பெரிய தாக்கம் நிறைந்த சிறுகதை. இதை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி முதலில்…

  ஒரு முறை படிக்க ஆரம்பித்து அடுத்தடுத்து டெங்கோவை
  பின் தொடர நேரிடுகிறது. சரியான ஆழமான படைப்பு.
  சிறுகதைக்குள் ஒரு கதை பூனைகள் நகரம் அப்படியே மெய்சிலிற்க்கிறது..

  எதுவுமற்றதாக ஒரு நபர் இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
  இது அமானுஷ்யங்களையும் சேர்த்தே பேசி இருக்கிறது.

  வலி நிறைந்த தந்தையின் வாழ்வு;
  அதைப் பின் தொடர்ந்த தமையனின் வாழ்வு;
  விட்டுச் சென்ற தாய்;
  தாம் யாருக்கு பிறந்தோம் என்று தேடல்…
  அப்பா அத்தனையும் ரணம், ரணம் ரத்தம் காயம் கீழே குத்தி கிழித்த வெட்டு காயங்கள்.

  டெங்குவையும் அவன் அப்பனையும் கண்டுபிடித்து கட்டித்தழுவி முத்தமிட்டு என் கட்டளிலேயே படுக்க வைத்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்து நான் அவர்களோடு கரைந்து போகலாம் என்று தோன்றுகிறது. பூனைகள் நகரம் போல் ஏமாந்தவர்களின் நகரமாய் அன்புக்கு இயங்குபவர்களின் நகரமாய் டெங்கோவின் நகரம் புதிதாய் கட்டமைத்து வாழலாம்…

  நிறைய டெங்கோக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தே டெங்கோ நகரமாக கட்டமைக்கலாம்.

  இதுபோன்ற கதை எல்லாம் படித்து விட்டால் எனக்கு எழுதவே தோன்றாது; எழுதிய அனைத்தும் அபத்தமாகப்படும். ஆயிஷா கதை கூட என்னை இன்னமும் துரத்துகிறது. அதேபோல் தீப்பாதி கதை இப்போது பூனைகள் நகரம்.

  ஜெயகாந்தன் தன்னுடைய கதையில் ஒருவனின் மனைவி ஓடிப் போவது தெரிந்தும் அவன் அப்படியே படுத்திருப்பான். அதுபோல்தான் டெங்குவின் அப்பா…

  இதில் யாரைக் கண்டு நாம் இரக்கப்படுவது டெங்கோவா அவன் அப்பாவா? யார் இரக்கத்துக்குரியவர்?

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.