ஐந்து எழுத்துமாகி நின்று
ஐந்து பூதம் உள்ளடக்கி
ஐயன் ஈசன் தானிருக்க
ஐயம் வேண்டாம்
உள்ளுருகு!
கங்கை நீர் சடையில் தாங்கி
கொங்கை மார்வள் பாதி கொண்டு
மங்கைபாகன் முக்கண்மூர்த்தி
மூலநாதன் தாளொழுகு!
பங்கய பாதனவனை பொன்னார் மேனியனை
சங்கையின்றி வணங்கி நின்றால்
தங்கிடுமே அருள் இனிதே..
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com