மனிதனைப் போல் பல உயிரினங்கள்
அதனைப் போலவே – பல அதுக்களை
உருவாக்கி விடுகின்றன
கொஞ்சம் கூட மூலமற்ற சூனியத்திலிருந்து…
இன்னும் சில
மரங்களைப் போல்
பறவைகளைப் போல்
அதனைப் போலவே அல்லாத
வேறொன்றிலிருந்து – பல அதுக்களை
உருவாக்கி விடுகின்றன
மேலதைப்போல…
உலகம்
சூனியத்திலிருந்துப் பல்கிப் பெருகுகிறது
பித்தாகோரஸின்
எண்ணிமப் பிரம்மத்தின் படி…
அதே நேரம்…
ஏதென்ஸ் நகரில்
சாக்ரடீஸ்
அதிகமாய் படித்தமையால்
பேசத் தெரியவில்லையெனப்
பிறர் அறிவுறுத்தலால் விஷக்கோப்பையை
ருசிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்…
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!