அகோரங்களை
தினம்
இயல்பெனக் கடந்து போகிறது
பெரு நாழிகை!
மயங்கியும் மிரண்டும்
சயனிக்கின்றன
பல கிழமைகள்!
கடற்கரை மணலில்
சுவடுத்துகள்கள்
பறந்தன காற்றில்
பழமை
வலிச்செய்தியோடு!
காலச்சுழற்சியின்
பாகங்களில்
பக்கம்
பிடிபடுகிறது
நீள் பயணத்திற்குப்
பின்!
சுயமாய் குறித்துக் கொண்ட
பல
நேரங்கள்
நிரந்தரமில்லை!
அடுத்தடுத்த
ஆயத்தங்கள்
நில்லாமல்
முன்மொழிந்தும்
வழி மொழிந்தும்
கடக்கின்றன சடுதியில்!
பெரும்
தர்க்கங்களிடையே
விஸ்தீரண விவரங்களில்
குடிகொள்கிறது
அழியப் போவதறியா
அகந்தை!
முடிவுரை எழுதப்பட்டே
நகர்ந்தாலும்
தேடலின் நிமித்தமான
வேட்கைப் பயணத்தில்
மறந்தும் மறைந்தும்
போகிறது
மௌனமாய்
நிரந்தர வேட்கை கொண்ட
தற்காலிகம்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
அற்புதமான கவிதை…
பாராட்டுக்கள்!
வாழ்த்துக்கள்!