தன்னுடைய அயராத போராட்டத்தால் நாட்டு மக்களை வழிநடத்தி அந்நியரிடமிருந்து விடுதலை அடையச் செய்து விட்டு சுதந்திர நாட்டில் நீண்ட காலம் வாழாமல் விண்ணுலகை அடைந்த நமது தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாள் ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த நாளில் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரையும் உடைமைகளையும் உழைப்பையும் கொடுத்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களை சிறிது எண்ணிப் பார்ப்போம்!