திருக்கார்த்திகை தீபம் ஏற்ற
தேடினேன் உன்னைத்தானே!
ஒருவார்த்தை சொல்லிப் போயேன்
வரும்நேரம் என்னவென்று?
தெருக்கோடி கோவில்மணி
தினந்தோறும் பாடுதடி!
திருவளர் சோதி ஏற்ற
தோகைமயில் உன்னைத் தேடி!
இருகரம் தீபம் ஏந்தி
என்னவளே நீயும் வர
உருவான ஒளியில் தானே
ஒளிருது நிலவும் வானில்!
நிறம் மாறும் பூக்களல்ல
நெஞ்சினில் பூத்த காதல்!
வரமென்றே நானும் சொல்ல
வருவாயோ நீயும் பெண்ணே!
சிறகினை விரித்திடலாம்
சின்னஞ்சிறு பறவையெனில்!
பெருவெளி கடந்திடலாம்
பெண்ணே நீ துணையிருப்பின்!
உறவென இயற்கையுமே
உருவாகும் நமக்கெனவே!
நிறைவான வாழ்வுபெற
நீ ஏற்றுவாயோ தீபமதை!
கைபேசி: 9865802942