உனக்கென ஒரு தோழி இருக்கின்றாள்
உன் வழியெல்லாம் ஒளியாலே நிறைக்கின்றாள்
அழகெல்லாம் உனக்கெனவே கொடுத்திட்டாள்
அதை அள்ளி நான் பருக மறுதலித்தாள்
வான் முகிலை அவள் மெல்ல தழுவுகிறாள்
வளர் காதல் கீதமொன்றை இசைக்கின்றாள்
தேனூறும் வெண்மலர்கள் பூத்திருக்க
தேயாது முழு நிலவாய் ஜொலிக்கின்றாள்
நான் இன்று கவி பாட ராகம் தந்தாள்
நாளையவள் மீண்டும் வந்து மாயம் செய்வாள்
என் மனதில் உன் நினைவை அவளும் சொல்வாள்
என் காதல் வென்றிடவே தூதும் செல்வாள்
கைபேசி: 9865802942
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!